News August 17, 2024

கணவர் கண்முன்னே மனைவி, குழந்தை பலி

image

கானத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முதாசார் அகமது. இவர் நேற்றிரவு மனைவி, 2 குழந்தைகளுடன் பைக்கில் முட்டுக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த சினிமா கேரவன் ஹாரன் அடித்ததால், அவர் நிலை தடுமாறினார். இதைத் தொடர்ந்து, பாண்டிச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முதாசாரின் மனைவி பெனாசியர் (30) மற்றும் ஒரு வயது குழந்தை அசின் அகமது (1) உயிரிழந்தனர்.

Similar News

News September 18, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் இன்று (செப்-18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

தாம்பரம் காவல்துறை விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் அனைத்து மகளிர் காவல்துறையினாரால்
வைஷ்ணவ கல்லூரியில் உள்ள மாணவியருக்கு காவல் உதவி செயலியின் நன்மைகள் மற்றும் பயன்பாடு, POCSO சட்டம் விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் பாவனை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று
(செப் -18) நடத்தியது. ஏராளமான மாணவியர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

News September 18, 2025

செங்கல்பட்டு: பெரியாருக்கு முன்பே சமூக மாற்றம்

image

சாதிய முறைகளுக்கு எதிராக அம்பேத்கர், பெரியாருக்கு முன்பே சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர் இரட்டைமலை சீனிவாசன். 1860 ஜூலை 7ல் செங்கல்பட்டு மாவட்டம் கோழியாளத்தில் பிறந்து தமிழ்நாட்டில் மேற்கத்திய கல்வி முறையில் பட்டம் பெற்ற முதல் தாழ்த்தபட்ட சமூக பிரதிநிதியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி ஆதிதிராவிட நலப்பள்ளிகள், விடுதிகள், உதவித்தொகை கிடைக்க செய்தார். இவரின் நினைவு தினம் இன்று.

error: Content is protected !!