News April 27, 2025
கணவன், மனைவி சண்டையா?

காஞ்சிபுரம், மாகரல் பகுதியில் அமைந்துள்ள மாகறலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது. இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து அபிஷேகத் தீர்த்தத்தை சாப்பிட ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களும், எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்கம் குறையும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 16, 2025
பிரதமர் மோடிக்கு விவசாயிகள் பிறந்தநாள் வாழ்த்து

நாளை பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பி.எம்.கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கும், விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கு குவின்டாலுக்கு 2500 ரூபாய் உயர்த்தி கொடுத்ததற்காகவும் நன்றி தெரிவிக்கும் வகையில் அப்பகுதி விவசாய மக்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிரில் மோடியின் பெயரை வரைந்து வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தெரிவித்தனர்.
News September 16, 2025
காஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் குன்றத்தூர் ஒன்றியத்தில் சேக்கிழார் நகர், வரதராஜபுரம் ஊராட்சி மற்றும் பூந்தண்டலம் கிராமம், திருப்பெரும்புதூர் ஒன்றியத்தில் கிளாய் ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
News September 16, 2025
துணை முதல்வரிடம் காஞ்சி விவசாயிகள் மனு

காஞ்சி விவசாயிகளின் நீர் பாசனத்துக்கு பயன்படும் பிவிசி பைப்புகள், பயோ சார் கோல் பிளான்ட் விவசாய கழிவுகள், பயோ கேஸ் அமைப்புகளை 50% மானியத்திலும் , காஞ்சியில் விவசாயக் கல்லூரி, கே வி கே அமைக்கவும், கரும்புக்கு கூட்டுறவு துறை போன்று தனியார் துறையிலும் ரூ 4000 வழங்க கோரி துணை முதல்வரிடம் மாநில விவசாய சங்க தலைவர் கே எழில் இன்று மனு அளித்தார்.