News March 22, 2024
கட்சிக் கொடிகளை அகற்றிய தேர்தல் அதிகாரிகள்

சென்னை கொருக்குப்பேட்டை மணலி சாலையில் 18வது மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது கட்சிக் கொடியுடன் வந்த வாகனத்தை நிறுத்தி கொடியை அகற்ற அறிவுறுத்தினர். மேலும் அனைத்து வாகனங்களையும் கண்காணிப்புடன் சோதனை செய்து வருகின்றனர்.
Similar News
News April 18, 2025
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். 10, 12ஆம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து இருக்க வேண்டும். அதேபோல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு குறைவாக இருக்க வேண்டும்.
News April 18, 2025
சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு

சென்னை ஐ.ஐ.டி.,யில் பதிவாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மே 19ஆம் தேதிக்குள் இந்த <
News April 18, 2025
சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புனித வெள்ளியான இன்று (ஏப்ரல் 18) பெருநகர் மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் சாரல் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விடுமுறையை முன்னிட்டு வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது வெயில் அடித்தாலும், இன்றைக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் செய்யுங்கள்.