News April 10, 2025
கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையாளர் கோ. ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள், மளிகை கடைகள் வணிகம் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், மேலும் இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் வணிக நிறுவனங்களும் ஒத்துழைப்பு மற்றும் உறுதி தர வேண்டும் எனவும் கூறினார்.
Similar News
News November 22, 2025
கோபி அருகே தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை!

கோபி அருகே வேட்டைகாரன்கோவில் கிழக்கு கரடு வீதியில் வசிக்கும் ஞானசேகரன் குடும்பத்தில், பிளஸ்-1 கணினி அறிவியல் மாணவர் குரு அஸ்வின் (16) நேற்று வீட்டில் தற்கொலை செய்தார். தேர்வில் மதிப்பெண் குறைவாகும் பயத்தில் அவர் மின்விசிறி கம்பியில் தூக்குப்போட்டு இறந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெரியவந்தவுடன் கோபி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 22, 2025
ஈரோட்டில் அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் காந்தி, நேரு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி டிச.4, 5 ஆகிய தேதிகளில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, 2-வது பரிசாக ரூ.3,000, 3-வது பரிசாக ரூ.2,000 வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
சேலம் -ஈரோடு புதிய மின்சார ரயில் சேவை துவக்கம்

சேலம்- ஈரோடு புதிய மின்சார ரயில் சேவை துவங்கப்படுவதாக நேற்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த புதிய ரயில் சேவை நாளை மறுநாள் (நவ.24) இயக்கப்படும். சேலம்-ஈரோடு மின்சார பாசஞ்சர் ரயில் (66621) வாரத்திற்கு 6 நாட்கள் (வியாழன் தவிர) இயக்கப்படுகிறது. சேலத்தில் காலை 6.15 புறப்பட்டு, மகுடஞ்சாவடி 6.29க்கும், சங்ககிரி 6.49க்கும், காவேரி ஸ்டேஷனுக்கு 7.04க்கும் ஈரோட்டிற்கு காலை 7.25 மணிக்கு சென்றடைகிறது.


