News August 17, 2024

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், இன்று விண்ணப்பம் செய்ய முகாம் நடத்தப்படுவதாக நேற்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவியது. இதனால், பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இது முற்றிலும் தவறான செயல். இத்தகைய தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News September 17, 2025

இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய எம்ஆர்கே

image

விழுப்புரத்தில் உள்ள ஏ.கோவிந்தசாமி மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு, தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் க.பொன்முடி, இரா.லட்சுமணன், செஞ்சி மஸ்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News September 17, 2025

விழுப்புரத்தில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழியினை அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று (17.09.2025) ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு திரு.ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News September 17, 2025

இடஒதுக்கீடு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய ராமதாஸ்

image

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பயிலரங்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு. தா.அருள்மொழி, ராமதாஸ் மூத்த மகள் காந்தி கலந்து கொண்டனர்.

error: Content is protected !!