News April 10, 2025
கடித்து குதறிய தெரு நாய்கள்: 20 பேர் காயம்

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாய் கடியால் காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Similar News
News November 22, 2025
சேலம்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

சேலம் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News November 22, 2025
சேலம் அருகே பெண் உடல் நசுங்கி பலி!

நாமக்கல்லை சேர்ந்த தம்பதி யாசர் – அபிதா. இருவரும் நேற்று பைக்கில் ராசிபுரத்தில் இருந்து சேலம் வழியாக அரூருக்கு புறப்பட்டனர். மாசிநாயக்கன்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் சென்றபோது பின்னால் வந்த டேங்கர் லாரி பைக் மீது உரசியவாறு சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்த அபிதா, லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 22, 2025
தலைவாசல் அருகே டவுசர் கொள்ளையர்கள்!

தலைவாசல் அருகே நத்தகரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர், கேரள மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயசூர்யா (25). இவர் வீட்டின் பின் பக்க கதவை பூட்டாமல் தூங்கி உள்ளார். நள்ளிரவில் முகமூடி அணிந்த டவுசர் கொள்ளையர்கள் 2 பேர், வீட்டுக்குள் நுழைந்து அவரை மிரட்டி 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


