News August 14, 2024

கடலூர்: 350 காவலர்கள் பணியிட மாற்றம்

image

கடலூர் மாவட்ட எஸ்.பி. இராஜாராம், மாவட்டத்திற்குள் ஒரே காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் உள்பட 350 பேரை பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர்களை உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய காவல் நிலையங்களுக்கு பணிக்கு செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News October 25, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.24) இரவு 10 மணி முதல் இன்று (அக்.25) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News October 24, 2025

கடலூர்: மாவட்ட வருவாய் அலுவலர் பணியிட மாற்றம்

image

கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மா.ராஜசேகரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த மா. ராஜசேகரன் தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலை (நில எடுப்பு பிரிவில்) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News October 24, 2025

சிறுமையை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

image

கடலூர், ஸ்ரீமுஷ்னத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் தனிமையில் இருந்தாக கூறப்ப்டுகிறது. இந்நிலையில், சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!