News April 1, 2025
கடலூர்: 25 வட்டாட்சியர்கள் இடமாற்றம் – ஆட்சியர் அதிரடி!

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 25 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதில் கடலூர் வட்டாட்சியராக மகேஷ், பண்ருட்டி வட்டாட்சியராக பிரகாஷ், சிதம்பரம் வட்டாட்சியராக கீதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News September 13, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (செப்.13) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைப்பு- அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்திட ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ என்னும் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
கடலூர் மக்களே… தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை!

கடலூர் மக்களே… SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள்<