News April 9, 2025

கடலூர்: 14 எஸ்.ஐ.க்கள் இடம் மாற்றம் – எஸ்.பி. அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை எஸ்.ஐ. சிவக்குமார், கடலூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கும், ஆயுதப்படை தில்லை கோவிந்தராஜ பெருமாள் சிதம்பரத்திற்கும், ஆயுதப்படை எஸ்.ஐ.க்கள் செல்வநாயகம், ராமஜெயம், ஆனந்தன் ஆகியோர் விருத்தாசலம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கும் என மாவட்டம் முழுவதும் 14 எஸ்.ஐ.க்களை பணி இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 25, 2025

கடலூர் மாவட்ட போலீசார் அதிரடி

image

கடலூர் மாவட்டம், பொயனபாடியில் ஸ்கேன் எந்திரத்தை பயன்படுத்தி வயிற்றில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த புகாரில் தென்னரசு, முருகன், செந்தில்குமார், ராஜா, ராஜேஸ்வரி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ராஜா (36) என்பவரது குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் பேரில், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News November 25, 2025

கடலூர்: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு!

image

கடலூர் மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு<> msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

News November 25, 2025

கடலூர்: சோபாவில் இருந்து தவறி விழுந்து பலி

image

சிதம்பரம் வடக்கு வடுகர் தெருவை சேர்ந்தவர் தொழிலாளி சுந்தரராஜன் (58). இவர் குடிபோதையில் தனது வீட்டின் சோபாவில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தும் அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!