News August 17, 2024
கடலூர் விளையாட்டு வீரர்களுக்கு அறிவிப்பு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலூர் மாவட்டம் சார்பில் 2024-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தகுதியுடையோர் WWW sdat.tn.govt.in என்ற இணையதளத்தில் வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
கடலூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு கடலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04142-212660) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News October 24, 2025
கருவில் உள்ள குழந்தையை பாலினம் கண்டுபிடிக்கும் கருவி பறிமுதல்

பெண்கள் கருவில் உள்ளது என்ன குழந்தை என்று பார்க்கும் மெஷின் வைத்திருந்தது தொடர்பாக பொயனப்பாடி கிராமத்தில் செந்தில்குமார்(40) என்பவரது வீட்டில் சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில், மருத்துவ அதிகாரிகள் குழு நேற்று (அக்.23) நேரில் சென்று சோதனை செய்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டில் இருந்த மெஷினை மட்டும் பறிமுதல் செய்து மருத்துவ குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
News October 24, 2025
கடலூர்: பட்டாசு வெடித்ததில் கோஷ்டி மோதல்

பரங்கிப்பேட்டை அருகே தச்சக்காட்டில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தது தொடர்பாக நடைபெற்ற இருதரப்பு மோதலில் அப்பகுதியைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், சந்திரா ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஜெயராமன், சந்திரா தனித்தனியே கொடுத்த புகாரில் பரங்கிப்பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து 8 பேரை தேடி வருகின்றனர்.


