News April 27, 2025

கடலூர்: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு !

image

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..

Similar News

News November 27, 2025

கடலூரில் பயங்கரம்: வாலிபர் அடித்துக் கொலை

image

கடலூர் மஞ்சகுப்பம் லோகநாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (37). இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று (நவ 27) அதிகாலை 3 மணி அளவில் அவரது வீட்டுக்குள் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பால்ராஜை உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார், பால்ராஜை கொலை செய்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News November 27, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் வரும் நவ.28-ம் தேதி முதல் நவ.30-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாளை (நவ.28) நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம், ரத்து செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News November 27, 2025

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (26.11.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில், ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!