News August 9, 2024
கடலூர் விஜிலென்ஸ் ஆணையருக்கு பதவி உயர்வு

தமிழ்நாட்டில் தஞ்சை, கள்ளக்குறிச்சி,பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் 24 காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி-ஆக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த முத்தமிழ் சென்னை முதன்மை கண்காணிப்பு அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
Similar News
News December 17, 2025
கடலூர் மாவட்டத்தில் 551.7 மி.மீ மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிச.17) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் மாவட்டம், கொத்தவாச்சேரி 64 மில்லி மீட்டர் மழை, பரங்கிப்பேட்டை 49.8 மில்லி மீட்டர் மழை, லால்பேட்டை 48.8 மில்லி மீட்டர் மழை, ஸ்ரீமுஷ்ணம் 32.1 மில்லி மீட்டர் மழை, சிதம்பரம் 25.3 மில்லி மீட்டர் மழை என மாவட்டத்தில் 551.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News December 17, 2025
கடலூர்: டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை!

இந்திய ரயில்வே கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்பட்சம் 40
4. சம்பளம்: ரூ.16,338 – ரூ.29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 17, 2025
கடலூர் மாவட்டத்தில் பரவும் போலி புகைப்படம்!

காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரியில், பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனேல் மெஸ்சி பார்வையிடுவது போல நேற்று கடலூர் மாவட்ட சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவியது. இந்நிலையில் இப்புகைப்படம் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலி புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.


