News March 19, 2024
கடலூர்: வாகனங்களில் கட்சி கொடியை அகற்ற அறிவுறுத்தல்

நாடாளுமன்ற தேர்தலை (2024) முன்னிட்டு கடலூர் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் இன்று மாலை மஞ்சக்குப்பம் பகுதியில் டி.எஸ்.பி பிரபு தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது கட்சி கொடியுடன் வந்த வாகனங்களை நிறுத்தி கொடிகளை அகற்றுமாறு வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளருக்கு அறிவுறுத்தினர்.
Similar News
News January 4, 2026
கடலூர்: திருமணத் தடையா? இங்க போங்க!

கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான மங்களபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 4, 2026
கடலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

கடலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 4, 2026
கடலூர்: 12th தகுதி.. ரயில்வே வேலை ரெடி!

கடலூர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு குறைந்தது 18 வயது நிரம்பிய, 12வது படித்தவர்கள்<


