News August 17, 2024
கடலூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு இரண்டு முறை சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. மும்பையில் இருந்து ஆக.27, செப்.6 தேதிகளிலும், வேளாங்கண்ணியில் இருந்து ஆக.29, செப்.8 தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. இந்த ரயில் புனே, சோலாபூர், ராய்ச்சூர், ரேணிகுண்டா, திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் வழியாக செல்லும்.
Similar News
News December 13, 2025
கடலூர்: சென்டர் மீடியனில் மோதி இளைஞர் பலி

குறிஞ்சிப்பாடி அடுத்த தொப்புளிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவலிங்கம்(36). இவர் தனது பைக்கில் நேற்று பெத்தநாயக்கன்குப்பம் அருகில் சென்ற போது, சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் பைக் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த சிவலிங்கம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 13, 2025
கடலூர்: நடப்பாண்டில் 393 வழக்குகள் பதிவு

கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக நடப்பாண்டில் இதுவரை 95 புகார்கள் பெறப்பட்டதில் 11 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 84 புகார்கள் தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகிறது. காவல் துறையின் மூலம் 2025 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 393 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.