News May 7, 2025

கடலூர்: ரூ.49,000 சம்பளத்தில் பேங்க் வேலை

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் www.unionbankofindia.co.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பேங்க் வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்!

Similar News

News November 22, 2025

கடலூர்: சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது

image

நெல்லிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்தவர் பிரதீஷ் குமார் (25). இவர் பண்ருட்டி பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியிடம் தவறான முறையில் சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரதீஷ் குமாரிடம் சிறுமி கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து பண்ருட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து பிரதீஷ் குமாரை நேற்று கைது செய்தனர்.

News November 22, 2025

கடலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கடலூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <>இங்கே கிளிக் <<>>செய்து, அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 22, 2025

கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் இன்று காலை வரை பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, லால்பேட்டை 49 மி.மீ, குறிஞ்சிப்பாடி 44 மி.மீ, பண்ருட்டி 35 மி.மீ, காட்டுமன்னார்கோவில் 27 மி.மீ, வடக்குத்து 26 மி.மீ, வேப்பூர் 18 மி.மீ, புவனகிரி 15 மி.மீ, கடலூரில் 13 மி.மீ என மாவட்டம் முழுவதும் 439.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!