News August 9, 2024

கடலூர் மாவட்ட ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றிரவு, கடலூர் காவல் ஆய்வாளர் தீபா, சிதம்பரம் உதவி ஆய்வாளர் மகேஷ், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News November 14, 2025

கடலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க

News November 14, 2025

கடலூர்: மனைவி நோயால் பாதிப்பு-கணவன் தற்கொலை

image

கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் (34) கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பத்மினிக்கு தைராய்டு நோய் உள்ளதாக தெரிகிறது. இதனால் முத்தமிழ்செல்வன் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பத்மினி கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 14, 2025

கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது‌. இந்த நிலையில் இன்று (நவம்பர் 14) காலை 8:30 மணி நிலவரப்படி வேப்பூர் 32 மில்லி மீட்டர், லக்கூர் 14.3 மில்லி மீட்டர், மே.மாத்தூர் 14 மில்லி மீட்டர், பண்ருட்டி 3 மில்லி மீட்டர், புவனகிரி 3 மில்லி மீட்டர், காட்டுமைலூர் 3 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 1.4 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 70.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!