News April 14, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் கல்பனா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் சீனுவாசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 29, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தொழிற்கல்வி மட்டப் படிப்பு முடித்தவர்கள், 45 வயது குட்பட்டவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரில் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

News October 29, 2025

கடலூர்: நொடிப்பொழுதில் நேர்ந்த மரணம்

image

பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கதிரவன் (32). இவர் நேற்று மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரும்பு டேப் மூலம் அளவீடு செய்தார். அப்போது அந்த மாடியின் அருகில் சென்ற மின் கம்பியில், அந்த இரும்பு டேப் பட்டதில் கதிரவன் மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News October 29, 2025

கடலூர்: தட்டித் தூக்கிய போலீசார்

image

கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வாகன திருட்டு தொடர்பாக தணிக்கை மேற்கொண்டனர். அப்போது மேல் பூவானி குப்பத்தை சேர்ந்த வேல்முருகன் (27), என்பவரை விசாரணை செய்ததில் புதுச்சத்திரம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலூர், உள்ளிட்ட இடங்களில் திருடிய 11 இருசக்கர வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்து நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!