News April 6, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி அப்பரண்டீஸ் ஷிப் சேர்க்கை முகாம், கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் வரும் 15ஆம் தேதி நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனரை நேரிலையோ, அல்லது 9499055861 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 28, 2025
கடலூர்: இளைஞருக்கு நேர்ந்த சோகம்

சிதம்பரம் அடுத்த கிள்ளை, எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (24). தொழிலாளியான இவர் தீபாவளி அன்று பட்டாசுகளை வெடித்தபோது, பறந்து வந்த ஒரு வெடி சந்தோஷின் சட்டைப்பையில் விழுந்து வெடித்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிள்ளை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 28, 2025
கடலூர்: ஓடும் ரயிலில் நகை திருட்டு

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ரயிலில் பயணித்த சரத்குமார் என்ற பயணியின் 2 பவுன் நகையை காணவில்லை என்றும், உடன் வந்த பயணி ஒருவர் திருடி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் அந்த நபரை பிடித்து சென்று புகார் அளித்தார். பின்னர் விசாரணையில் அந்த நபர் நகையை திருடியை ஒப்புக் கொண்ட நிலையில், அவரை கைது செய்தனர். பின்னர் மீட்ட நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
News October 28, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.27) இரவு 10 மணி முதல் இன்று (அக்.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!


