News January 24, 2025
கடலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர் பணிக்கும், சமூகப்பணியாளர் பணிக்கு 2 காலியிடங்கள் நிரப்படவுள்ளன. ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்கள் கடலூர் மாவட்ட இணையதள முகவரி www.cuddalore.tn.nic.in-ல் கொடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW!
Similar News
News December 1, 2025
கடலூர்: தொடர் மழையால் நிரம்பிய 31 ஏரிகள்

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயலின் காரணமாக அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 228 ஏரிகள் உள்ள நிலையில், மழையின் காரணமாக 31 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. மேலும் 50 ஏரிகளில் 76 – 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
News December 1, 2025
கடலூர் மாவட்டத்தில் 245.6 மி.மீ மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 01) காலை 8.30 மணி நிலவரப்படி, அண்ணாமலை நகரில் 36 மில்லி மீட்டர் மழை, சிதம்பரம் 26 மி.மீ மழை, பரங்கிப்பேட்டை 25.4 மி.மீ மழை, சேத்தியாத்தோப்பு 19.2 மி.மீ மழை, புவனகிரி 19 மில்லி மீட்டர் மழை என மாவட்டம் முழுவதும் 245.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
News December 1, 2025
கடலூர்: மயங்கி விழுந்த சிறுவன் திடீர் சாவு

விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (50). இவரது மகன் கிஷோர் (16) பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர்களது புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வீட்டில் இருந்த கிஷோர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


