News January 2, 2025
கடலூர் மாவட்டத்தில் ரூ.4 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனையானது உச்சம் தொடுவது தற்போது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் புத்தாண்டை முன்னிட்டு, சுமார் 4.5 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இருப்பினும் இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.51 லட்சம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றிய உங்கள் கருத்து? கமெண்டில் தெரிவிக்கவும்! ஷேர் செய்யவும்..
Similar News
News December 12, 2025
கடலூர்: டிச.31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News December 12, 2025
முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம்; ஆட்சியர் அறிவிப்பு!

கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர் , அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர் கூட்டம் வருகிற டிச.17ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் இக்கூட்டமானது மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே இதில் கலந்து கொண்டு பயன்பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
கடலூரில் நாளை குறைதீர் முகாம் அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ முஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர், புவனகிரி ஆகிய தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம், நாளை(டிச.13) நடைபெற உள்ளது. இம்முகாமானது வட்ட வழங்கல் அலுவலர் அல்லது நுகர்வோர் குறைதீர்வு அலுவலர் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


