News August 7, 2024
கடலூர் மாவட்டத்தில் மழை முழு நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி லக்கூர் 3 சென்டி மீட்டர், கீழ்ச்செருவாய் 3 சென்டி மீட்டர், வேப்பூர் 3 சென்டி மீட்டர், விருத்தாசலம் 2 சென்டி மீட்டர், தொழுதூர் 1 சென்டி மீட்டர், பண்ருட்டி 1 சென்டி மீட்டர், குப்பநத்தம் 1 சென்டி மீட்டர், ஶ்ரீ முஷ்ணம் 1 சென்டி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Similar News
News July 6, 2025
கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் தொலைபேசி எண்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (05/07/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
கடலூர்: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!
News July 5, 2025
கடலூரில் சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி..!

கடலூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் (அ) அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு <