News August 7, 2024
கடலூர் மாவட்டத்தில் மழை முழு நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி லக்கூர் 3 சென்டி மீட்டர், கீழ்ச்செருவாய் 3 சென்டி மீட்டர், வேப்பூர் 3 சென்டி மீட்டர், விருத்தாசலம் 2 சென்டி மீட்டர், தொழுதூர் 1 சென்டி மீட்டர், பண்ருட்டி 1 சென்டி மீட்டர், குப்பநத்தம் 1 சென்டி மீட்டர், ஶ்ரீ முஷ்ணம் 1 சென்டி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Similar News
News January 10, 2026
கடலூர்: அரசுப் பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 10, 2026
கடலூர்: 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

புவனகிரி அடுத்த வத்ராயன்தெத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் மகன் திவாகர்(15). இவர் நெய்வேலியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை எடுத்ததால், ஆசிரியர்கள் அவரது பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வர கூறியுள்ளனர். ஆனால் அவரது பெற்றோர் வராததால் மனமுடைந்த மாணவன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
News January 10, 2026
கடலூர்: பணிச்சுமையால் கோர்ட் ஊழியர் தற்கொலை

சிதம்பரம் பள்ளிப்படையை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி சரிதா (46). இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள கோர்ட்டில் ஆவண எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரிதா பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சரிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


