News August 8, 2024
கடலூர் மாவட்டத்தில் பேச்சு போட்டி

கடலூர் மாவட்டத்தில், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வருகிற 21ஆம் தேதியும், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி வருகிற 22ஆம் தேதியும், மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடைபெறவுள்ளது. மேலும், வெற்றியாளர்களுக்கு பரிசு தொகைகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News July 9, 2025
கடலூர்: கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடலூர் ரயில் விபத்து குறித்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் உட்பட 13 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு படை (RPF) சம்மன் அனுப்பியுள்ளது. 13 பேரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
News July 9, 2025
கடலூர்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஸ்வேஷ்

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவர் விஸ்வேஷ் வீடு திரும்பினார். ரயில் விபத்தில் அவரது சகோதரர் நிமலேஷ் உயிரிழந்த நிலையில், இன்று அவர் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
News July 9, 2025
கடலூர்; 10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை

கடலூர் மாவட்ட மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <