News August 7, 2024
கடலூர் மாவட்டத்தில் நேற்றைய வெப்பநிலை முழு நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 36 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Similar News
News July 6, 2025
குறிஞ்சிப்பாடியில் மேலும் ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (ஜூலை 7) ஆம் தேதி குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ச.கு.வே மேல்நிலைப் பள்ளி, அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ ராம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
கடலூரில் உள்ள காசிக்கு நிகரான கோயில்

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயில் தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 18ஆவது தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காசியில் 16 முறை இறைவனை வணங்குவதும், இங்கு ஒரு முறை வணங்குவதும் சமம் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலையில் 8 முறையும், சிதம்பரத்தில் 3 முறையும், இத்தலத்தில் ஒருமுறையும் வணங்குவது சிறப்பாகும். தெரியாத உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க !
News July 6, 2025
கடலூர்: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை

கடலூர் மக்களே! தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.