News August 3, 2024
கடலூர் மாவட்டத்தில் நேற்றைய வெப்பநிலை முழு நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ததால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 37 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 37 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Similar News
News September 17, 2025
கடலூர்: செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று தே.கோபுராபுரம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது டிரைவர் தப்பியோடினார். லாரியை சோதனை செய்ததில், செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
News September 17, 2025
கடலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

கடலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <
News September 17, 2025
கடலூர்: இன்று சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

கடலூர் மாவட்டம், கோவிலானூர் கிராமத்தில் அமைந்துள்ள மாதா பள்ளி, நல்லூர் வட்டம், தொளார் அரசினர் மேல்நிலைப்பள்ளி, மற்றும் பண்ருட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் இன்று (17/09/2025) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறப்பு நடைபெற உள்ளது. இதில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது