News December 31, 2024
கடலூர் மாவட்டத்தில் அதிமுக-வினர் 1475 பேர் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை சம்பவத்தில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பெண்கள் உட்பட 1475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 5, 2025
கடலூர் அருகே இளைஞர் மீது துப்பாக்கி சூடு

கிள்ளை அடுத்த பின்னத்தூரை சேர்ந்தவர் தவுசிக் (18). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான முஸ்தபா (18) தவுசிக்கின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் தவுசிக் தந்தையின் பழைய ஏர் கன் வகை துப்பாக்கியை எடுத்து பார்த்த கொண்டிருந்த போது தவறுதலாக தவுசிக்கின் வலது காலில் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தவுசிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கிள்ளை போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 5, 2025
கடலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு …

கடலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<
News December 5, 2025
கடலூர்: 12 வயது சிறுமி கர்ப்பம்; இளைஞர் கைது

சேத்தியாத்தோப்பு அருகே 12 வயது சிறுமி செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே சூளையில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் (26) என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதில் அவர் கருவுற்றார். இதையடுத்து மருத்துவனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


