News April 11, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.11) பல்வேறு பகுதியில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடலூர் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. இந்த தகவலை உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News December 19, 2025
கடலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

கடலூர் மக்களே, தமிழக அரசு சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டில் 1,000 பேருக்கு ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News December 19, 2025
கடலூர் மாவட்டத்தில் நாளை கரண்ட் இருக்காது!

கடலூர் மாவட்டத்தில் நாளை (டிச.20) பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக கடலூர் டவுன், செம்மண்டலம், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, பெண்ணாடம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, செம்மங்குப்பம், குள்ளஞ்சாவடி, தோப்புக்கொல்லை, கோரணப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News December 19, 2025
கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

ஒரு சர்க்கரை ஆலையின் எல்லைக்குட்பட்ட கரும்புகளை மற்ற சர்க்கரை ஆலைகளின் அரவைக்கு எடுத்துச் செல்வது கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி சட்ட விரோத செயலாகும். எனவே சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை எல்லைக்குட்பட்ட புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பகுதி விவசாயிகள் தங்களது கரும்புகளை வேறு சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


