News May 17, 2024

கடலூர் மழைப்பொழிவு விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் கலெக்டர் அலுவலகம் பகுதியில் 5 செ.மீட்டரும், வேப்பூர், லால்பேட்டை, பெலாந்துறை ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும், சிதம்பரம், காட்டுமயிலூர், சேத்தியாதோப்பு, தொழுதூர், கீழச்செருவாய் ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.

Similar News

News November 24, 2025

கடலூர்: தபால் நிலையம் அருகே கிடந்த ஆண் சடலம்

image

மஞ்சகுப்பம், தலைமை தபால் நிலையம் ஆட்டோ நிறுத்தம் அருகே முகவரி மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கதக்க ஆண் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்ட து. இறந்து கிடந்த வரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இவரை பற்றிய தகவல் தெரிந்தால் கடலூர் புது நகர் காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னாவை 9941408190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.24) காலை 8.30 மணி நிலவரப்படி சேத்தியாத்தோப்பு 210 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 141 மில்லி மீட்டர், சிதம்பரம் 140.2 மில்லி மீட்டர், புவனகிரி 140 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 103 மில்லி மீட்டர், ஶ்ரீ முஷ்ணம் 86‌.1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 1681.6 மி‌.மீ மழை பதிவாகியுள்ளது.

News November 24, 2025

கடலூர்: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று(நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!