News March 28, 2025
கடலூர் மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News April 9, 2025
கடலூர்: டிகிரி முடித்தவர்களுக்கு 15000 சம்பளத்தில் வேலை

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள தயாரிப்பு நிர்வாகி (Product Executive) பணியிடத்தை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் <
News April 9, 2025
கடலூர்: மீனவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் வரும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடிப்பதை தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மேற்காணும் தடை செய்யப்பட்ட 61 நாட்களுக்கு கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார். இதை உங்க மீனவ நண்பர்களுக்கு SHARE செய்ங்க…
News April 9, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் 12.4.2025 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர் பீச்ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் நடத்தப்படும். இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.