News December 4, 2024
கடலூர்: பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் நாளை ( 05.12.2024) வியாழக்கிழமை இயங்கும் என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 13, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில், பெருமாள் ஏரி, ஸ்ரீ நெடுஞ்சேரி ஏரி, ஸ்ரீ புத்தூர் ஏரி, குணமங்கலம் ஏரி, குன்னத்தூர் ஏரி, வாலாஜா ஏரி உள்ளிட்ட 33 ஏரிகளுக்கு 3 ஆண்டு கால மீன் பிடி குத்தகைக்கு நவ.11 முதல் மின்னணு ஒப்பந்தப்ப புள்ளி வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
கடலூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் மாதம்தோறும் நான்கு புதன் கிழமைகளில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (Unique Disabiliy Identity Card) வழங்கும் முகாம்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் வார புதன் மற்றும் அனைத்து வெள்ளிகிழமைளில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


