News May 17, 2024

கடலூர்: நீச்சல் பயிற்சி வரும் 26ஆம் தேதி நிறைவு

image

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கியது. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் இந்த நீச்சல் வகுப்பு வரும் 26ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

கடலூர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <>www.tahdco.com<<>> இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது கடலூர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும்.

News December 15, 2025

கடலூர்: திருமணம் மறுப்பு-இளைஞர் தற்கொலை

image

கிள்ளையைச் சேர்ந்தவர் உலகநாதன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனால் உலகநாதன் தனது காதலியை சந்தித்து திருமணம் செய்யக் கூறியபோது அவர் மறுத்துள்ளார். இதில் மனமுடைந்த உலகநாதன் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து கிள்ளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 15, 2025

கடலூர்: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!