News March 28, 2024
கடலூர் தொகுதியில் 24 பேர் வேட்பு மனு தாக்கல்!

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது. அதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று கடலூர் தொகுதியில் போட்டியிட 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் நா.த.க மணிவாசகம், தேமுதிகவில் கூனங்குறிச்சியை சேர்ந்த பெரியநாயகராஜ் ஆகியோர் 2-வது மனு உட்பட 7 பேர் என, கடலூர் தொகுதியில் மொத்தம் 24 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
Similar News
News December 1, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் மாதம் தொடங்கி, பிப்ரவரி மாதம் வரை வாரந்தோறும் சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 28 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் (நவ.30) தெரிவித்துள்ளார். இதில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான UDID அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
கடலூர்: இளம்பெண் தலை துண்டித்து படுகொலை

காட்டுக்கூடலுாரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி தமிழரசி (35). இவர், தன் கணவரின் தம்பிகள் இருவரும் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக சிதம்பரம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் முருகானந்தம் என்பவரை கைது செய்த நிலையில், மற்றொரு தம்பியான பாலகிருஷ்ணன் ஆத்திரத்தில் நேற்று (நவ.30) தமிழரசியை தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசாரை அவரை கைது செய்தனர்.
News December 1, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.30) இரவு 10 மணி முதல் இன்று (டிச.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


