News May 7, 2025
கடலூர்: தரமற்ற உணவு குறித்து இனி எளிதாக புகார் அளிக்கலாம்

உணவகம், பேக்கரிகளில் உள்ள தரமற்ற உணவு குறித்து மக்கள் புகார் அளிக்க ‘TN FOOD SAFETY CONSUMER’ எனும் செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக கலப்படம், தரமற்ற உணவு குறித்து டைப் ஏதும் செய்யமால் மிக எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்!
Similar News
News December 8, 2025
கடலூர்: பள்ளி மாணவி தற்கொலை

ராமாபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் மகள் தேவிகா (17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஞானசேகரன் தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தேவிகா தூக்கில் சடலாக தொங்கியதை கண்டு, அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 8, 2025
கடலூர்: 56,000 பேருக்கு கால்நடை பராமரிப்பு கடன்

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்காக கிசான் அட்டை மூலம் கறவை மாடுகள், ஆடுகள் போன்றவற்றை வாங்கவும், பராமரிப்பு செலவுகளுக்கும் வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை நான்கரை ஆண்டுகளில், கடலூர் மாவட்டத்தில் 56 ஆயிரத்து 674 பேருக்கு ரூ.220.61 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.