News May 8, 2025
கடலூர்: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!
Similar News
News November 28, 2025
கடலூர்: புயல் அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
கடலூர்: வாலிபர் குண்டாசில் கைது

காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்த அறிவழகன் (29) என்பவரை அங்காளம்மன் கோயில் தெரு சஞ்சய் (23) கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்தது சம்பந்தமாக காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி.பரிந்துரையில் சஞ்சயை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று (நவ.27) உத்தரவிட்டார்.
News November 28, 2025
கடலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் ஹெடேரில் சம்பா பயிரிடப்பட்டுள்ளது. தொடர் மழை, வெள்ளம், பூச்சி தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் தங்களது பயிர்களை பாதுகாத்துக் கொள்ள பயிர் காப்பீடு செய்வது அவசியம். எனவே பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நவ.30-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


