News March 19, 2024
கடலூர்: சோதனை சாவடி கட்டிடம் திறந்து வைத்த எஸ்.பி

கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் ரூ.13 லட்சம் செலவில் புதிதாக சோதனை சாவடி கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு புதிய சோதனை சாவடி கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 11, 2025
மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.பி

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களிடம் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்று பேசுகையில், போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டும், சமூகத்தின் மீது அக்கறை கொண்டு போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
News August 11, 2025
கடலூர்: சொந்த ஊரில் அரசு வேலை

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 48 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 10th தேர்ச்சி பெற்றவர்கள் <
News August 11, 2025
கடலூர்: அழகுக்கலை பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியை பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு உட்பட செலவுகள் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மற்றவர்களும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க.