News August 14, 2024

கடலூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்தும் இன்று மற்றும் வரும் 19ஆம் தேதி செங்கல்பட்டில் இருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம் ஆகிய ஊர்களில் நின்று செல்லும். செங்கல்பட்டிலிருந்து மாலை 5.55க்கு புறப்படும் இந்த ரயில் (06019) பண்ருட்டிக்கு இரவு 08.05க்கு வந்து திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 5.50க்கு செல்லும்.

Similar News

News November 23, 2025

கடலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

கடலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!

News November 23, 2025

கடலூர் மாவட்டத்தில் 758.9 மி.மீ மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.23) காலை 8.30 மணி நிலவரப்படி, கொத்தவாச்சேரி 71 மி.மீ மழை, பரங்கிப்பேட்டை 61 மி.மீ மழை, சேத்தியாதோப்பு 56 மி.மீ மழை, புவனகிரி 52 மி.மீ மழை, வேப்பூர் 30 மி.மீ மழை என மாவட்டம் முழுவதும் 758.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News November 23, 2025

கடலூர்: கொதிக்கும் அண்டாவில் விழந்த குழந்தை உயிரிழப்பு

image

காட்டுமன்னார்கோவில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது 3 வயது குழந்தை சுஷாந்த் கடந்த 18ம் தேதி மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் வெளியே ஹோட்டலுக்காக குருமா செய்த அண்டாவில் தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயத்துடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி நேற்று குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!