News March 19, 2024
கடலூர் சிறையில் கேமரா உடைப்பு

சென்னையை சேர்ந்தவர் ரவுடி தனசேகரன். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் கடந்த 2 ஆண்டுகளாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சிறையில் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்போது தனசேகர் தனக்கு விருப்பமான படத்தை திரையிடக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சிசிடிவி கேமராவை உடைத்து வார்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 12, 2025
கடலூர்: டிச.31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News December 12, 2025
முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம்; ஆட்சியர் அறிவிப்பு!

கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர் , அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர் கூட்டம் வருகிற டிச.17ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் இக்கூட்டமானது மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே இதில் கலந்து கொண்டு பயன்பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
கடலூரில் நாளை குறைதீர் முகாம் அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ முஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர், புவனகிரி ஆகிய தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம், நாளை(டிச.13) நடைபெற உள்ளது. இம்முகாமானது வட்ட வழங்கல் அலுவலர் அல்லது நுகர்வோர் குறைதீர்வு அலுவலர் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


