News April 15, 2025

கடலூர் காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

பொதுமக்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தற்போது தொடர் விடுமுறை காலம் வருவதால் சிறுவர்கள் நீர்நிலைகளில் தனியாக இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோர்கள் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பாதுகாப்பில் தான் சிறுவர்கள் நீர்நிலைகளில் குளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வுடன் இருக்க SHARE செய்யவும்.

Similar News

News October 14, 2025

கடலூர்: போலீசார் உதவியுடன் லாட்டரி விற்பனை!

image

கடலூர் மஞ்சக்குப்பம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஜெயராமன், சாரதி, மல்லிகா, பிரகாஷ், ஆகியோரை புதுநகர் காவல் போலீசார் கடந்த அக்.13 அன்று பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் சில போலீசார் உதவியுடன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 5 செல்போன்கள், லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூ.22,94,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News October 14, 2025

கடலூர்: பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை

image

கடலூர் மாவட்டம், குமராட்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்ற சேட்டு (24) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், அவரிடம் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

News October 14, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.13) இரவு 10 மணி முதல் இன்று (அக்.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!