News April 18, 2024
கடலூர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் பிரிவு சார்பில் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான கணினி தொடர்பியல் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
Similar News
News December 10, 2025
கடலூர்: வேன் மோதி துடிதுடித்து பலி

கடலூர் மாவட்டம், கம்மாபுரம் அடுத்த கோ.ஆதனூரை சேர்ந்தவர் தொழிலாளி சேகர் (50). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் விருத்தாசலம்- சிதம்பரம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வேன், சேகர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 10, 2025
கடலூர்: 21 வயது; 6 வழக்குகள்; பாய்ந்த குண்டாஸ்

களையூர் ஏரிக்கரையில் நவ.18ம் தேதி சித்ரா என்பவரது கழுத்திலிருந்து தாலியை பறித்து சென்றது தொடர்பாக, தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வி.அகரம் ஜெயக்குமார் (21) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் எஸ்.பி உத்தரவின் பெரில், ஜெயக்குமாரை ஆட்சியர் குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று (டிச.08) உத்தரவிட்டார்.