News August 17, 2024
கடலூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம் என்ற தவறான பதிவுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சமூக வலைதளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News November 21, 2025
கடலூர்: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு!

கடலூர் மக்களே, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 9444123456 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 21, 2025
கடலூர் மாவட்டத்தில் 10.90 மி.மீ மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவம்பர் 21) காலை 8.30 மணி நிலவரப்படி, சிதம்பரம் 3 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 3 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 3 மில்லி மீட்டர், லால்பேட்டை 1 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 0.2 மில்லி மீட்டர், கடலூர் 0.1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 10.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News November 21, 2025
கடலூர்: வெளுத்து வாங்க போகும் மழை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நவ.21-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


