News April 19, 2025
கடலூர்: கடலில் மூழ்கும் பிச்சாவரம்?

பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள் மிகுந்துள்ள இந்த பகுதி தமிழக மட்டுமின்றி இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாதலமாகும். கடலோர மாவட்டங்களில் எதிர்கொள்ளும் இயற்கை சீற்றங்கள் புயல், சுனாமி , கடல் அரிப்பு போன்றவற்றின் பாதிப்புகளை தடுத்து வருகிறது. கடல் மட்டம் உயர்வு காரணமாக 2100-க்குள் பிச்சாவரம் சதுப்புநிலங்களில் 413 ஹெக்டேரும் நீரில் மூழ்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, Share It
Similar News
News November 13, 2025
கடலூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை

பரங்கிப்பேட்டை அடுத்த கறிக்குப்பத்தை சேர்ந்தவர் விவசாயி முத்தமிழ்செல்வன் (34). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த முத்தமிழ்செல்வன் நேற்று தன்னுடைய வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 13, 2025
கடலூர்: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 13, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில், பெருமாள் ஏரி, ஸ்ரீ நெடுஞ்சேரி ஏரி, ஸ்ரீ புத்தூர் ஏரி, குணமங்கலம் ஏரி, குன்னத்தூர் ஏரி, வாலாஜா ஏரி உள்ளிட்ட 33 ஏரிகளுக்கு 3 ஆண்டு கால மீன் பிடி குத்தகைக்கு நவ.11 முதல் மின்னணு ஒப்பந்தப்ப புள்ளி வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


