News January 22, 2025
கடலூர் ஆட்சியர் இன்றைய சுற்றுப்பயண விவரம்

கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் இன்று (22.01.2025) கடலூர் அண்ணா சந்தை, கடலூர், மஞ்சக்குப்பம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெள்ளி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் செம்மண்டலம் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகளுக்கு கட்டப்பட்டு வரும் விடுதி ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
Similar News
News December 6, 2025
கடலூர்: லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா திருத்தம் செய்வதற்கு, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் திருமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த நேரு என்பவரிடம் ரூ.15,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில் லஞ்சம் தர விரும்பாத அவர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
News December 6, 2025
கடலூர்: ரயில் மோதி கல்லூரி மாணவன் பலி

காடாம்புலியூரை அடுத்த காட்டாண்டிக்குப்பத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சக்தி நாதன் (22). தனியார் கல்லூரியில் படித்து வந்து இவர் நேற்று பண்ருட்டி அருகே விழாமங்கலத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், சக்திநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 6, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (டிச.5) இரவு 10 மணி முதல் இன்று(டிச.6) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


