News August 7, 2024

கடலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், மங்களூர், நெய்வேலியில் அரசு ஐ.டி.ஐக்கள் செயல்படுகின்றன. இங்கு காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர்களின் நேரடி சேர்க்கை வரும் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் நேற்று அறிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் செய்யவும்.

Similar News

News October 20, 2025

கொடுக்கன் பாளையத்தில் ஆடு திருட முயன்ற இருவர் கைது

image

கொடுக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவருடைய வீட்டில் இன்று (அக்.19) காலை இரண்டு வாலிபர்கள் ஆடுகளை திருடியுள்ளனர். இதனை பார்த்த விஜய், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் பிடித்து தர்ம அடி கொடுத்து நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட சொக்கநாதன், மைக்கேல் அகஸ்டின் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News October 19, 2025

கடலூர்: கரண்ட் கட்டா? ஒரு Phone போதும்!

image

கடலூர் மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 19, 2025

கடலூர்: அனுமதி இன்றி பட்டாசு விற்றவர் கைது

image

நடுவீரப்பட்டு பகுதியில் அரசின் அனுமதி இன்றி கடைகளில் பட்டாசு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் இன்று (அக்.19) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமார் ரூ.10,000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, விற்பனையில் ஈடுபட்ட பிரபாகரன் (54) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!