News March 21, 2024
கடலூர் அருகே ரோந்து பணி அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (21/03/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் ராமலிங்கம், நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 5, 2026
கடலூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!
News April 5, 2026
கடலூர் மாவட்டத்தில் 53 பேர் வேட்பு மனு தாக்கல்

கடலூர் மாவட்டத்தில் நேற்று 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அதன்படி திட்டக்குடி 8 பேர், விருத்தாசலம் 10 பேர், பண்ருட்டி 6 பேர், கடலூர் 7 பேர், குறிஞ்சிப்பாடி 2 பேர், புவனகிரி 5 பேர், சிதம்பரம் 11 பேர், காட்டுமன்னார்கோவில் 3 பேர். நெய்வேலி ஒருவர் என மொத்தம் 53 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News April 5, 2026
கடலூர்: 5 இடங்களில் சீமான் பிரச்சாரம்!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று (ஏப்.5) காலை 10.30 மணிக்கு திட்டக்குடி, காலை 11.30 மணிக்கு வடலூர், மாலை 4.30 மணிக்கு நெய்வேலியில் வாகன பரப்புரையும், மாலை 5.30 மணிக்கு சிதம்பரம், மாலை 6.30 மணிக்கு கடலூரில் பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.


