News April 15, 2024
கடலூர் அருகே போலீஸார் அதிரடி

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் பகுதியில் எஸ்.பி. தனிப்படை போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அதில் 26 குடங்களில் 250 லிட்டர் பனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து மோகன் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
கடலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில்,<
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 10, 2025
கடலூர் எஸ்.பி.க்கு நினைவு பரிசு வழங்கல்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடந்த 2005 ஆம் ஆண்டு திருக்கோவிலூர் டி.எஸ்.பி. ஆக பணிபுரிந்த போது பவாரியா குற்றவாளிகளை பிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதையடுத்து தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த கடலூர் எஸ்.பி. ஜெயக்குமாரை, பூவானிக் குப்பம் அரசு பள்ளியில் கடந்த 1981- 82-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் நேற்று சந்தித்து நினைவுபரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
News December 10, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான “கபீர் புரஸ்கார்” விருது ஆண்டுதோறும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. சமுதாய நல்லிணக்கத்தை காப்பதற்காக சிறப்பாக செயல்புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதை பெற விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.


