News September 30, 2025
கடலூர் அருகே பரிதாபம்; இளம்பெண் தற்கொலை

விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்தவர்கள் ராஜேஷ் – ஐஸ்வர்யா (32) தம்பதியினர். இந்நிலையில் நேற்று முதல் நாள் இரவு ராஜேஷ் மதுஅருந்தி வீட்டுக்கு வந்ததால், அவரை ஐஸ்வர்யா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், மனமுடைந்த ஐஸ்வர்யா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 8, 2025
கடலூர்: பள்ளி மாணவி தற்கொலை

ராமாபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் மகள் தேவிகா (17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஞானசேகரன் தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தேவிகா தூக்கில் சடலாக தொங்கியதை கண்டு, அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 8, 2025
கடலூர்: 56,000 பேருக்கு கால்நடை பராமரிப்பு கடன்

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்காக கிசான் அட்டை மூலம் கறவை மாடுகள், ஆடுகள் போன்றவற்றை வாங்கவும், பராமரிப்பு செலவுகளுக்கும் வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை நான்கரை ஆண்டுகளில், கடலூர் மாவட்டத்தில் 56 ஆயிரத்து 674 பேருக்கு ரூ.220.61 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.