News August 9, 2024
கடலூர் அருகே இன்று ‘தமிழ்ப் புதல்வன்’ திடம் தொடக்கம்

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6-12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு, உயர்கல்வி பயில்வதற்காக ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் கல்லூரியில் இன்று அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் மாணவர்களுக்கு பற்று அட்டைகளை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.
Similar News
News September 17, 2025
கடலூர்: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்.<
News September 17, 2025
கடலூர்: லஞ்சம் வாங்கிய காவலர் பணியிட மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் லாட்டரி டிக்கெட், போதை பொருட்கள் போன்றவற்றை தடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூர் முதுநகரில் லாட்டரி டிக்கெட் விற்பனை மற்றும் மாமூல் வாங்குவதற்கு துணை போனதாக எழுந்த புகாரில் சிக்கிய தனிப்பிரிவு போலீஸ்காரர் பாபு, கடலூர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.
News September 17, 2025
கடலூர்: செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று தே.கோபுராபுரம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது டிரைவர் தப்பியோடினார். லாரியை சோதனை செய்ததில், செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.