News March 27, 2025
கடலூர்: அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம்

கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி படிக்கும் மாணவி தர்ஷினி இன்று (மார்ச்.27) மாலை கல்லூரி முடிந்ததும் அரசு பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் பீச் சாலை தீயணைப்பு நிலையம் அருகே பேருந்தில் இருந்து மாணவி இறங்க முயன்றபோது, ஓட்டுனர் கவனக்குறைவுடன் பேருந்தை இயக்கியதில் மாணவி தர்ஷினி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
Similar News
News November 4, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளான வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இல்லத்திற்கு சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (04.11.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை ஆட்சியர் பயிற்சி டியூக் பார்க்கர் உட்பட பலர் உள்ளனர்.
News November 4, 2025
கடலூர்: கிராம ஊராட்சி செயலர் வேலை!

கடலூர் மாவட்டத்தில் 37 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்தது 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
6. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் இன்று (நவ.4) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இப்பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 7.2.2026 வரை நடைபெற உள்ளது.


