News August 2, 2024

கடலூர் அமைச்சர் வேண்டுகோள்

image

கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, நினைவு அஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டுமென வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேண்டுகோள் இன்று விடுத்துள்ளார்.

Similar News

News December 9, 2025

கடலூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

image

கடலூர் மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். ஷேர்

News December 9, 2025

கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

image

கடலுார் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் வரும் டிச.13-ம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், வட்ட வழங்கல் பிரிவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், ரேஷன் கடை மற்றும் பொருட்கள் சார்ந்த குறைகள்/புகார்களை மக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்தியா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

கடலூர்: நகை திருடிய தாய் – மகள் கைது

image

ராமநத்தம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சித்ரா (45). இவர் தன் வீட்டில் வைத்திருந்த 9 1/4 பவுன் தங்க நகையை காணவில்லை என ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சித்ராவின் வீட்டில் வாடகைக்கு இருந்த பவுனாம்பாள் (46), அவரது மகள் ஸ்வேதா (24) ஆகியோர் பீரோவை திறந்து நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நகைகளை மீட்டனர்.

error: Content is protected !!