News August 10, 2024
கடலூர் அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை

கடலூர் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக கடலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் 25 ரூபாய்க்கு தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. இதை https://www.cpostolics.gov.in இணையதளம் மூலமும், அருகில் உள்ள அஞ்சலகங்களில் நேரில் சென்றும் வாங்கலாம். ஷேர் செய்யவும்
Similar News
News November 19, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(நவ.18) இரவு 10 மணி முதல் இன்று(நவ.19) காலை 6 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, ஆகிய உட்கோட்டங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு மானியம்

ஜெருசேலம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 பேருக்கு நேரடியாக மானியம் வழங்குவதற்கு புர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 28.2.2025-க்குள் <
News November 18, 2025
கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்!

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.18) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 60 மில்லி மீட்டர், சிதம்பரம் 47.8 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 43.1 மில்லி மீட்டர், கடலூர் 36.9 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 35 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 32.3 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 559 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


